தனியார் நிறுவன வேலைவாய்ப்பு, வீட்டு வாடகைக்கு குடியிருப்போர் சரிபார்ப்பு, ஓட்டுநர்கள் அல்லது பள்ளி வாகன பணியாளர்களுக்கான காவல் நடத்தைச் சான்றிதழைப் (PVR) பொதுமக்கள் ஆன்லைனிலேயே பெறலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- eservices.tnpolice.gov.in இணையதளத்தில் 'Citizen Services' -> 'Police Verification' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- சரிபார்ப்பு வகையைத் தேர்வு செய்யவும் (Self Verification / Job Verification / Tenant Verification).
- விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை, தற்போதைய முகவரிச் சான்று மற்றும் புகைப்படத்தைப் பதிவேற்றவும்.
- தனிநபர் சரிபார்ப்புக் கட்டணம் ₹500 (வணிக நிறுவனங்களுக்கு ₹1,000) ஆன்லைனில் செலுத்தவும்.
சரிபார்ப்பு நடைமுறை:
- உள்ளூர் காவல் நிலைய சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு மற்றும் நிலைய அதிகாரி குற்றப் பின்னணி இல்லை என்பதை உறுதி செய்து 15 நாட்களுக்குள் டிஜிட்டல் சரிபார்ப்புச் சான்றிதழை வழங்குவர்.